விளக்கே! திருவிளக்கே! வேதன்-உடன்பிறப்பே!
ஜோதி மணிவிளக்கே ஸ்ரீ தேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே-காமாக்ஷித்-தாயாரே
பசும் பொன் விளக்குவைத்துப்-பஞ்சுத்திரி-போட்டுக்
குளம்போல நெய்விட்டுக்-கோலமுடன்-ஏற்றி-வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு, எந்தன்-குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு, மாளிகையும்-தான்-விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக்-கண்டு-கொண்டேன்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை-தாருமம்மா!
ஸந்தானப் பிச்சையுடன் தனங்களும்-தாருமம்மா!
பெட்டி நிறையப் பூஷணங்கள்-தாருமம்மா!
பட்டி நிறையப் பால் பசுவைத்-தாருமம்மா!
கொட்டில் நிறையக் குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தந்து என் பக்கத்தில்-நில்லுமம்மா!
அல்லும் பகலும் என்றன் அண்டையிலே-நில்லுமம்மா!
சேவித் தெழுந்திருந்தேன்; தேவி வடிவு கண்டேன்
வஜ்ஜிரக் கிரீடங் கண்டேன்-வைடூர்ய-மேனி-கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்; முழுப் பச்சைமாலை கண்டேன்
சவுரிமுடியக் கண்டேன்; தாழைமடல்-சூடக்கண்டேன்
பின்னழகு கண்டேன்; பிறைபோல்-நெற்றிகண்டேன்
சாந்துடன் நெற்றிகண்டேன்; தயார் வடிவங்-கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப்-பொட்டு-கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக்-கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணையாழி-மின்னக்கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென-ஜொலிக்கக்-கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் பாலாழி-பீலிகண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு-கொண்டேன்
அன்னையே அருந்துணையே அருகிருந்து-காத்திடுவாய்
வந்த வினையகற்றி மஹாபாக்யம்-தந்திடுவாய்!
தாயாரே உந்தன் தாளடியில் சரணம்-என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்
குடும்பக் கொடி விளக்கே! குற்றங்கள்-பொறுத்திடுவாய்
குறைகள் தீர்த்திடுவாய்! குடும்பத்தைக்-காத்திடுவாய்
தந்தையும் தாயும் நீயே தயவுடனே-ரக்ஷிப்பாய்!
கருணைக்கடல் நீயே!
கற்பகவல்லி நீயே ஸகல கலாவல்லி தாயே ரக்ஷிப்பாய்!
தஞ்சம் உனையடைந்தேன்! துக்கமெல்லாம்-போக்கிடுவாய்!
அபிராமவல்லி அம்மா! அடைக்கலம் நீயே-அம்மா!
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே-ஸர்வார்த்த-ஸாதிகே |
சரண்யே த்ர்யம்பிகே தேவி நாராயணி நமோ-(அ)ஸ்துதே-||
ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம்-தேஹி-மஹேச்வரி |
ஸமஸ்தம் அகிலம் தேஹி தேஹி மே பரமேச்வரி ||
அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம |
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ மஹேச்வரி||
No comments:
Post a Comment